விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோவை-641 001. (பக்கம்: 264). சுவைபட எழுதியுள்ள மேனாட்டுப் பயண நூல். பாரீஸ், சுவிட்சர்லாந்து, லண்டன், இத்தாலி முதலான உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வந்ததைப் பயண நூலாக்கியுள்ளார் ஆசிரியர். பயண நூலைத் தொடங்கும்போது தனது தாயாரைப் பாரீசுக்கு அழைத்துச் சென்ற அனுபவத்துடன் தொடங்கியிருப்பது புதுமையை வழங்குவதால் தொடர்ந்து படிக்கத் தோன்றுகிறது.பயணம் சென்ற ஒவ்வோர் ஊரிலும் உள்ள கலைச் சிறப்புகளையும், தொழில் வளத்தையும் தெரிவித்திருப்பதுடன் அங்கங்கே நடைபெறும் திருட்டு முதலான குற்றங்களைத் தெரிவித்திருப்பதும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்றன. பயண இலக்கிய நூல்களில் படிக்கப்பட வேண்டிய நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.இயல்பாக அமைந்துள்ள கொங்குத் தமிழ் ஒரு நாவலைப் படிப்பது போன்ற எண்ணத்தை தருவதுடன் ஆர்வத்தைத் தூண்டுகிறது.