மணிமேகலைப் பிரசுரம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256).
தனது அமெரிக்கப் பயணத்தில் கண்டவைகளையும்; கேட்டவைகளையும்; படித்துணர்ந்தவைகளையும் தொகுத்து ஒரு நாவல் வடிவில் தந்துள்ளார் ஆசிரியர். ஆசிரியர் 30 ஆண்டுகளுக்கு மேலாக காரைக்கால் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராக இருந்து பல நல்ல அறச்செயல்களை தொடர்ந்து தொய்வில்லாது சேவை புரிபவர். ரோட்டரி சங்கம் துவங்கிய இடம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ என்ற நகரத்தில் தான். அங்குள்ள அடுக்குமாடி ஒன்றின் 711ம் எண் அறையில் தான் முதன் முதலில் ரோட்டரி சங்கம் துவக்கப்பட்டது. அந்த அறையை ஒரு தெய்வீக திருத்தலமாகவே கருதி, அந்த அறையை காண வேண்டும் என்ற வேட்கையின் விளைவு தான் இந்த அமெரிக்கப் பயணம் என மனம் லயித்துச் சொல்கிறார்."அமெரிக்கர்கள் யாரையும் எதிலும் நம்பக் கூடிய சுபாவம் கொண்டவர்கள்' (பக். 222), "முதலாளித்துவம் என்றால் திறமைக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம்' (பக். 205) என்ற பல செய்திகளைக் காணலாம்.