நேஷனல் பப்ளிஷர்ஸ், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128).
பதினேழாம் நூற்றாண்டில் முகவை மாவட்டத்தில் முத்தமிழிலும் தேர்ச்சி பெற்ற ஞானக் கவியாய் திகழ்ந்த பெருமகனார் ஜவாதுப் புலவர். "சரமம் கவிச்சக்கரவர்த்தி ஜவாது' என எல்லாராலும் போற்றி வணங்கப்பட்ட மகான். தமிழ்க் கவிபாடி வாதில் வெல்லும் வல்லமை பெற்றவர். நபிகள் நாயகப் பெருமானின் பரிபூரண பரிசுத்த நெறியாம் "தீன்' நெறிக் கொள்கைகளை மையக் கருவாய் அமைத்த பின்ளைத் தமிழ் நூல் தான் இந்நூல். மகான் ஜவாது புலவர் அந்தாதி, பிள்ளைத்தமிழ், பஞ்சரத்னமாலை, சீட்டுக்கவிகள், சித்திரக்கவிகள், தனிப்பாடல்கள், கலம்பகம், வண்ணக்கவி எனப் பல பா வகைகளில் பா வலிசுகளில் பாடுவதில் வல்லவர்.ஜவாது புலவரின் வாழ்வியலில் நிகழ்ந்த அற்புதங்கள், புலமை வெளிப்பாடு போன்ற தகவல்களோடு அவரது பிள்ளைத் தமிழையும் பதிப்பித்துள்ளார் ஆசிரியர். இவர் மகான் ஜவாதுப் புலவர் பெருமானின் வம்சாவளியில் வந்த பெயரர். இஸ்லாமின் பல நுணுக்கமான செய்திகளை அழகு தமிழில் அள்ளித் தந்துள்ளார்.