பழனியப்பா பிரதர்ஸ், "கோனார் மாளிகை' 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்: 70)
மருத்துவத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை கண்டுபிடித்த டாக்டர் ஜேம்ஸ் சிம்சனின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர். டாக்டர் ஜேம்ஸ் சிம்சனின் கண்டுபிடிப்பை பற்றியும், அதற்காக அவர் எவ்வளவு பாடுபட்டார் என்பதைப் பற்றியும் அறியும்போது, மருத்துவ உலகிற்கும், மக்களுக்கும் எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
மகப்பேறு மருத்துவத்தில் பயன்படுத்துவதற்காக புதுவகை இடுக்கி ஒன்றையும், காயங்களைக் குணப்படுத்த "அக்குப்ரஷர்' என்ற புதிய செயல்முறை உருவாவதற்கும் சிம்சன் பாடுபட்டுள்ளார்.
இதுபோன்ற அறிவியல் கண்டுபிடிப்பாளர்களின் வாழ்க்கையையும், அவர்களின் கண்டுபிடிப்புகளையும் நாமும் அறிந்து கொள்வதோடு, நம் குழந்தைகளும் அறிந்துகொள்ள செய்யவேண்டியது மிக அவசியம்.