காவ்யா, 16, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-600 024. (பக்கம்: ௨௩௫).
* இலக்கியம், சிற் பம், ஓவியம், விளம்பரம், திரைப்படம், நாடகம் என்றாற் போல பல மொழித் தளங்களிலும் குறியீடு ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலக்கியக் குறியீடு பற்றி, `இலக்கியத்தில் ஒரு பொருளையோ அல்லது நிகழ்ச்சியையோ குறிப்பிட வரும் ஒரு சொல் அல்லது சொற்குறி தன் இயல்பான பொருளைத் தவிர்த்த பிறிதொன்றினைக் குறிப்பிடுவதே குறியீடு' என்பார் வை.சச்சிதானந்தம்.இந்நூலில் மருதப் பாடல்களில் அமைந்துள்ள உள்ளுறை வெளிப்பாடுகளை குறியீடுகள் எனும் தளத்தில் வைத்து விளக்கியுள்ளார் நூலாசிரியர்.குறியியல் கோட்பாடு பற்றி முதல் பகுதியிலும், இலக்கியக் குறியீட்டியம் பற்றி இரண்டாம் பகுதியிலும், குறியியலும் சங்கப் புலப்பாட்டு நெறிகளும் குறித்து மூன்றாம் பகுதியிலும், குறியியல் வாசிப்பில் மருத இலக்கியம் என நான்காம் பகுதியிலும் தம் ஆய்வின் முடிவுரையை ஐந்தாம் பகுதியிலும் விளக்கியுள்ளார்.ஆய்வுக்கு அணுக முடியாத `குறியியல்' குறித்து மிகவும் சிறப்பாக ஆய்வு செய்துள்ள இளம்பரிதியின் துணிச்சல் வரவேற்கத்தக்கது.