வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டிபஜார், சென்னை - 17. (பக்கம்:304)
விஜயாலய சோழ மன்னர் காலம் துவங்கி, மாலிக்காபூர் காலம் வரை ஒரு நெடிய காலப்பரப்பில், தமிழ் மண்ணில் நிகழ்ந்த அரிய வரலாற்றுச் செய்திகளை, மன்னர்கள், அவர்களின் குலம் பெற்ற எழுச்சி, வீழ்ச்சி என, சகல விவரங்களையும் ஒரு மெல்லிய சரம் தொடுத்தாற் போன்று கதை சொல்லும் உத்தியில், அருமையாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர். பிரமிக்க வைக்கும் கடின முயற்சி. ஏராளமான கல்வெட்டு ஆதாரங்கள், வரலாற்று அறிஞர்களின் கண்ணோட்டம், இவற்றோடு தன் 32 ஆண்டுக்காலப் பேராசிரியப் பணியின் அனுபவத்தையும் கொட்டிக் குழைத்து, எதிர்காலச் சந்ததியினரின் தமிழ்ப்பற்றுக்கு உரம் சேர்க்கும் வகையில், இந்த நூலை உருவாக்கியுள்ளார் முனைவர்.சிவ.சீதளா. 40 தலைப்புகளில் தமிழக வரலாறே படிக்கச் சுவையாகப் பதிந்து கிடக்கிறது. எளிய நடையில், அரிய விஷயங்கள் நிரம்பிய அருமையான நூல்! புதிய முயற்சி; போற்றத்தக்க முயற்சியும் கூட!