6/388, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 288. விலை: ரூ.75).
பழமொழிகள் கிழமொழிகள் அல்ல. அனுபவத்தில் வழி காட்டும் புதுமொழிகள் என்பதை இந்த நூல் காட்டுகிறது.
கடைச்சங்க காலத்தில் முன்றுறை அரையனார் பாடிய 400 வெண் பாக்களை தெளிவுரை, பிற மேற்கோள் பாடல்களோடு இந்நூல் விளக்குகிறது.
கரிகாலனுக்கு யானை மாலை போட்டு அரசன் ஆக்கியது. தருமன் சூதாடியது, பொய் சொன்னது, பாரி முல்லைக்குத் தேர் தந்தது. மனுநீதிச் சோழன் மகனைத் தேர்க்காலில் இட்டது. இதுபோன்ற பல கதைகளை இப்பழமொழி நூல் விளக்குகிறது.
கல்வி உடையவர்கள் இன்று வெளிநாடுகளுக்குப் பறந்தோடி பிழைப்பை நாடுவது அன்றே இருந்த ஒன்று தான்.
`ஆற்றவும் கற்றார், அறிவுடையார் அஃது உடையார்,
நாற்றிசையும் செல்லாத நாடு இல்லை-அந்நாடு
வேற்றுநாடு ஆகாதம வேயாம், ஆயினால்
ஆற்றுணா வேண்டுவது இல் - பழமொழி.
பழமொழிக்குத் தெளிவுரை தந்த இந்த நூலை ஆய்வு நூல் என்று சொல்ல இயலாது. எழுத்துப் பிழைகளும் ஏற்க இயலாது.