வசந்தா பதிப்பகம், மனை எண்.9, ஜோசப் குடியிருப்பு, குறுக்குத் தெரு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 416. விலை: ரூ.150).
* `பளபளப்பான பல நிறச் சலவைக் கற்கள் அழுத்திப் பொன்மினுக்குப் பூசிப் பலபல அடுக்கு மாடங்கள் உடைத்தாய் வான் முகடு அளாய், காண்பார் கண்ணும் கருத்தும் கவரும் நீர்மைத்தாய் உயர்ந்தோங்கி நிற்கும் எழுநிலை மாடம் போல, ஆசிரியர் நக்கீரனாரது உரை நிவந்து நிற்றலும், அம்மாடத்தின் அருகே புல் வேய்ந்த குடிலும் ஓடு மூடியதொரு சிற்றிலும் ஏழைமைத் தோன்றமும் உடைய வாய்த் தாழ்ந்து நிற்றல்போல் இளம்பூரனார், பேராசிரியர் உரைகள் பீடு குறைந்து நின்றலும்' என மறைமலை அடிகள் இவ்வுரையின் பெருமையைக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் இந்நூலின் சிறப்பை அறிய முடிகிறது.பவானந்தரால் முதன் முதலில் வெளியிடப்பட்ட இவ்வுரை நூல் நீண்ட நாட்களுக்குப் பின் தற்போது வெளிவருகிறது. ச.சீனிவாசனின் முன்னுரையில் `இடைச்செருகல்' பற்றிய கருத்துக்கள் பயனுள்ளவை. மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய நூலிது.