தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. (பக்கம்: 792 ).
* திருக்குறள் எனும் தமிழ் வேதத்திற்கு எத்தனையோ உரைகள் வந்துள்ளன. அத்தனையும் ஏதோ ஒரு வகையில் சிறப்பு உடையனவாக உள் ளன. இந்நூல் இக்கால மக்கள் திருக்குறள் கருத் துக்களை இன்னும் தெளிவாக மாறுபாட்டிற்கு ஏற்ப உணர மிக அருமையான முறையில் வெளிவந்துள் ளது.இந்நூலாசிரியர் தம் நுண்ணறிவினாலும், பட்டறிவினாலும் பல நூல்களையும் பகுத்தாய்ந்து இவ்வுரை நூலைத் தந்துள்ளதற்கு, தமிழ் மக்கள் மிகவும் நன்றி கூறுவர் என்பதில் ஐயமில்லை.இந்நூலின் இரண்டாம் பகுதியில் அறத்துப்பால் 38 அதிகாரங்களையும், பொருட்பால் 70 அதிகாரங்களையும் இணைத்து, இக்காலத்தின் தேவைக்கு ஏற்ற வகையில் கருத்துவழிப் பகுப்பாக 14 இயல்களாகப் பகுக்கப் பெற்றுள்ளதை தமிழறிஞர்கள் மனமுவந்து ஏற்பர் என்று உறுதியாகக் கூறலாம். 1,330 குறட்பாக்களுக்கும் தெளிவுரை தந்துள்ள நூலாசிரியர், சில இடங்களில் சிறப்புரை கூறி நம்மைச் சிந்திக்கவும், புதிய கருத்துக்களை ஏற்கவும் வைக்கிறார். மறப்பினும் என்று தொடங்கும் குறளுக்குச் சிறப்புரையில் `பிறப்பொழுக்கம் எனும் தொடர் ஆழ்ந்த பொருளுடையது.இந்நூலைப் படிப்பதன் மூலம் பரிமேலழகர், பரிபெருமாள், பரிதியார் ஆகியோரின் உரைப் பகுதிகள் சிலவும் படித்த மன நிறைவு அடையலாம். இந்நூல் பல முறை படித்து பாதுகாக்கப்பட வேண்டிய பயனுள்ள நூலாகும்.