தமிழ்நிலா பதிப்பகம், 16/4, 48வது தெரு, நங்கநல்லூர், சென்னை-61. (பக்கம்: 143.)
திலகவதி நாவல்களில் பெண் பாத்திரங்கள்; நாவல்களில் மகளிர் சிக்கல்கள் - தேடல், திலகவதி சிறுகதைகளில் மகளிர் சிக்கல்கள் என்னும் மூன்று கட்டுரைகள் இதில் அடக்கம். குறிப்பாகச் சொல்லப் போனால் திலகவதியின் படைப்புகளைப் பற்றிய ஆய்வென்றே இதைக் கூறலாம். ஆணாதிக்கச் சாடல்கள், பெண்ணடிமையில் பிரதிபலிப்புகளே மிகுந்து காணப்படும் இன்றைய பெண் படைப்பாளிகளுக்கு.
`ஓர் ஆண் படைப்பாளராலேயே பெண்ணின் மனதைத் துல்லியமாக காட்ட முடிகிறது, இயல்பை எடை போட முடிகிறது. ஒரு யமுனா, ஒரு கங்கை, ஒரு காவேரி, ஒரு கோகிலா என்றெல்லாம் சக்தி வாய்ந்த பெண் நாயகிகளை எந்தப் பெண் படைப்பாளியேனும் படைத்திருக்கிறாளா? என்று ராஜம் கிருஷ்ணன் (பக்.27) கூறுவதை எடுத்தாண்டிருப்பது சிறப்பு.
நூலின் தலைப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் நிறைய வேறுபாடுள்ளது. `இலக்கியங்களில்' என்ற பரந்த சொல்லை எண்ணிக் கொண்டு நூலினுள் நுழைந்தால் விஞ்சுவது ஏமாற்றம் தான். ஆய்வின் தலைப்பை ஒட்டி பெயர் அமைந்தால் நன்றாக இருக்கும்.