சேகர் பப்ளிகேஷன்ஸ், 66/1, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: ௧௪௪).
* தமிழர் வாழ்வின் பெருமையை, தொன்மைச் சிறப்பைத் தெரிந்து கொள்ள சங்க இலக்கியங்களே நம்மிடம் இருக்கும் சான்றாதாரம். சங்க இலக்கியம் அகம், புறம் என இரண்டு பொருட்பாகுபாட்டின் அடிப்படையில் பல அரிய தகவல்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவுகிறது. இது, தமிழ் மொழிக்கு மட்டுமே உள்ள சிறப்பு.
சங்க இலக்கியங்கள் காட்டும் அக மாந்தர்கள், தங்கள் அகஉணர்வுகளை வெளிப்படுத்த எவ்வாறெல்லாம் உயிரினக் காட்சிகளைப் பயன்படுத்திக் கொண்டனர் என்பதை இந்நூலில் ஆய்வு செய்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். நற்றிணையை மட்டும் அடிப்படையாகக் கொண்ட இவ்வாய்வு நூலைப் படித்துப் பார்த்தால், பண்டைத் தமிழர்களின் செம்மாந்த வாழ்வும் அவர்கள் இயற்கையைத் தங்கள் வாழ்வோடு இணைத்துக் கொண்ட முறையும் நம்மை அந்தப் பொற்காலத்திற்கு அழைத்துச் செல்லும். ஈடுபாட்டுடனும், மிகுந்த அக்கறையுடனும் படித்துச் சுவைக்க வேண்டிய அருமையான புத்தகம்.