தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, சென்னை-90. (பக்கம்: 187).
* நான்கு தொகுதிகளை உள்ளடக்கிய இச்சிறியதோர் திறனாய்வு நூல், கடைச் சங்க காலம் தொட்டு கி.பி.19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலான இரண்டாயிரம் ஆண்டுகளில் தோன்றி வளர்ந்த சிறந்த தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள அரிய செய்திகளான தமிழின சமயம் மற்றும் சமூக வரலாறுகள், கோட்பாடுகள், மொழி வளர்ச்சியில் சைவம் ஆற்றியுள்ள போற்றத்தக்க தொண்டுகள் மட்டுமின்றி இலக்கியப் பரப்பையும் விரிவாக எடுத்துரைக்கிறது.
தமிழ் மொழிப் பற்றும், ஆர்வமும் இருப்பினும், பழம் பெரும் இலக்கியங்களைக் கற்றுணர்ந்து அறியாத மற்றும் அறிய வாய்ப்பற்ற அன்பர்களுக்கு, அனைத்து இலக்கியச் செய்திகளையும் தன்னுள்ளே அமையப் பெற்றுள்ள பொற்களஞ்சியமாகவே இந்நூல் திகழ்கிறது. இலக்கியச் சுவை நுகர்ந்தோருக்கு தீஞ்சுவைக் கருப்பஞ்சாறு இந்நூல்.
நற்றழிழ் உலா வரும் தமிழினம் நேசக்கரம் நீட்டி இந்நூலை வரவேற்பதுடன், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் யாவும் இதைப் பாடநூலாக அங்கீகரிக்க வேண்டும். அரசு நூலகங்களில் இத்தமிழ்ப் பெட்டகம் இடம் பெறுதலும் வேண்டும்.