சுப்ரபாத் பப்ளிஷர்ஸ், பு.எண்.3, ப.எண்.104, பெரியார் பாதை, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 157)
வியத்தகு விஞ்ஞான வளர்ச்சியில், நயத்தகு பயன்களை அனுபவிக்கும் நாம், பற்பல அறிவியல் அறிஞர்களுக்கு கடன்பட்டவர்கள். பதினான்காம் நூற்றாண்டில் இருந்து 19ம் நூற்றாண்டு ஈறாக 28 அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை மற்றும் கண்டுபிடிப்புகளின் குறிப்பும், விளக்கமும் சின்னஞ்சிறுவர்களுக்குப் புரியும் வண்ணம் ஆசிரியர் எழுதியுள்ளார்.
பூமியின் அச்சு சுழற்சியைக் கூறிய நிக்கோலஸ் கோபர்னிகஸ், ரத்தச் சுற்றோட்டம் பற்றிக் கூறிய வில்லியம் ஹார்வி, புவி ஈர்ப்பு விசையைப் பற்றிக் கூறிய விஞ்ஞானிகளின் விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் (பக்.18). ரேடியத்தைக் கண்ட மேடம் க்யூரி, விமானம் கண்ட ரைட் சகோதரர்கள், ராமன் விளைவு கண்ட சர் சி.வி.ராமன் போன்ற 28 அறிஞர்களின் வாழ்க்கை குறிப்பும் கண்டுபிடிப்புகளும் சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளன.