ஷ்ரீ செண்பகா பதிப்பகம், 24/28, கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144.)
காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கும் ஏகாம்பர நாதரை 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த பூண்டி அரங்கநாத முதலியார் போற்றிப் பாடியுள்ள நூல் இது. பல்வேறு துறைகளும், பாவகைகளும் விரவி 100 பாடல்களைக் கொண்டதே கலம்பகம் எனும் சிற்றிலக்கியமாகும். தமிழ்ப் புலவர் படிப்பிற்குரிய பாட நூல் களில் ஒன்றாக இருந்த சிறப்புடையது இது. பெண்ணொருத்தி கச்சி ஈசர் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் பாடல்கள் இன்பச் சுவை மிக்கவை. கவிஞர் பத்மதேவன் எல்லாரும் படித்து மகிழத்தக்க வகையில் இனிய உரையைத் தந்துள்ளார். படித்து சுவைக்கத் தக்கச் சிற்றிலக்கியம் இந்நூல்.