Wiley Dreamtech Indian Pvt Ltd., 19A, Ansari Road, Daryaganj, New Delhi110 002. Contact Mobile: 98413 03082. (பக்கம்: 307. `சிடி'யுடன் சேர்ந்தது)
தற்காலத்தில் சிறிய நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்கள் என அனைவருமே கணக்கியலை கணிப்பொறி மூலமாகவே நிர்வகிக்கிறோம். அம்முறையில் `Tally 7.2 Version' சமீப காலமாக வரவாகும். இந்நூல் அனைவருக்கும் புரியும் ஆங்கிலத்தில், கணினியின் ஸ்கிரீனில் பார்க்கும் வகையில் கையாள வேண்டிய கட்டளைகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தெளிவாகவும், படங்கள் மூலமும் விளக்கி கூறுவதாக அமைந்து உள்ளது.
இந்நூல் இரு பிரிவுகளாக உள்ளது. முதல் பாகம் கணக்கியலின் அறிமுகமாகவும், இரண்டாம் பாகம் `டேலி-7.2' உபயோகிக்கும் முறை குறித்து விளக்கும் 13 உட்பிரிவுகளாகவும் அமைந்துள்ளது. சிறிது அடிப்படை கணினி அறிவும், கணக்கியலும் அறிந்த எல்லாரும் இந்நூலைப் பயன்படுத்தி பயன் பெறும் அளவுக்கு தெளிவாக நூல் அமைந்துள்ளது. இதே விவரங்கள் அடங்கிய `சிடி'யும் உள்ளது நூலுடன் இணைப்பு மற்றும் ஒரு சிறப்பு ஆகும். மொத்தத்தில் கணக்கியலை கணிணி வரவால் எளிமையுடன் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ள நல்ல வழிகாட்டி நூல் இது.