அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகம், தஞ்சாவூர்-613 005. (பக்கம்: 280, டெம்மி )
பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களில் அறிவியல் பற்றி முனைவர்களும், வல்லுனர்களும் தங்கள் மேலான கருத்துக்களை இதில் வழங்கியுள்ளனர். அமிர்தவர்ஷிணி ராகத்தில் பாடி முத்துசாமி தீட்சிதர் மழையை வரவழைத்தார். லைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்துவதில்லை; காற்று இல்லாத நிலை எட்டுவதற்கு 80 கிலோ மீட்டர் உயரம் செல்ல வேண்டும். புதன் தன்னுடம்பைச் சுற்றிக் கொள்ள 59 நாட்கள் ஆகிறது. டால்பின் என்பது மீன் இனத்தைச் சேர்ந்தது அல்ல; அது பாலூட்டி இன விலங்கு; நட்சத்திர மீன், மீன்கள் வகையில் வருவதன்று. இதுபோன்ற எண்ணற்ற கருத்துக்களைத் தாங்கியுள்ள இந்நூல் படித்துப் பயன்பெற ஏற்றது.