ஸ்ரீ செண்பகா பதிப்பகம், 34பி.கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112.)
`செந்திறத்த தமிழோசை வட சொல்லாகி' என்ற திருநெடுந்தாண்டகத்தில் திருமங்கை ஆழ்வார் தம் முடிவை திடமாக வைக்கிறார். வடமொழிக்கும் முற்பட்டது தமிழ் என்பதை பல இலக்கியங்கள் இயம்புகின்றன. இவ்வேளையில் `செம்மொழி' என்பதற்கு சீர்தூக்கி பார்க்க தின இதழில் வெளியான கட்டுரைக்கு விளக்கம் செம்மொழிச் சிந்தனை என்ற கட்டுரை.இதைத் தொடர்ந்து, காலத்திற்கு ஏற்ற கல்வி, மரபு மாற்றங்கள், பொதுவுடமை, புதுக்கவிதை, நாவலின் இலக்கியப் போக்கு, கவிமணியின் குழந்தைப் பாடல்கள், பெண்ணியச் சிந்தனை, ஆட்சி மொழி என்று 12 வெவ்வேறான கட்டுரைகள் இந்நூலை மெருகேற்றுகின்றன.