D.K.Printworld (P) Ltd., Sri Kunj, F52, Bali Nagar, New Delhi110 015.
தமிழக வரலாற்றை தொடர்ச்சியாக எழுதுவதற்கு இலக்கியம் தவிர கல்வெட்டுகள் பெரும் துணை புரிகின்றன. அவற்றில் பெரும்பாலானவை தமிழ் கல்வெட்டுகளே ஆகும். ஆனால், பல கல்வெட்டுகள் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அக்காலத்தில் சமஸ்கிருத மொழி இந்திய துணைக் கண்டத்தின் இணைப்பு மொழியாக இருந்ததால் அம்மொழியிலும் சாசனங்கள் இங்கு காணப்படுகின்றன. இரு மொழியில் எழுதப்பட்ட பல சாசனங்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக பாண்டியரது தளவாய்புர செப்பேட்டை குறிக்கலாம்.தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தை சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டுகளையும் சேப்பேடுகளிலும் கிடைக்கின்ற வரலாற்று செய்திகளை நன்கு ஆராய்ந்து ஏழு தலைப்புகளில் இவ்வாசிரியர் கொடுத்துள்ளார். அரசியல் அமைப்பு, நிர்வாகம், ராணுவம், பொருளாதாரம், சமூக வாழ்க்கை, கல்வி, இலக்கியம், சமய வளர்ச்சி போன்ற தலைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் கிடைத்துள்ள அரிய பல சான்றுகள் எவ்வாறு பயனுள்ளவையாக அமைந்துள்ளன என்பதை ஆசிரியர் ஆங்காங்கே விளக்கியுள்ளார். எடுத்துக்காட்டாக இலக்கியம், கல்வி என்ற தலைப்பில் அரசருக்கு அளிக்கப்பட்ட கல்வி முறையைப் பற்றியும், அக்காலத்தில் வாழ்ந்த சிறந்த வடமொழிப் புலவர்களை பற்றியும் பல சான்றுகள் கிடைத்துள்ளன.அணிந்துரையில் பேராசிரியர் கே.வி.ராமன் குறிப்பிட்டுள்ளது போன்று பயனுள்ள பல செய்திகளை தரும் வடமொழிக் கல்வெட்டுகளை இந்நூல் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார்.