திருமகள் நிலையம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160).
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். எனவே, நோய் வரும் முன் காப்பது அறிவுடைமை. இதற்கு நோய்களைப் பற்றி அறிந்திருத்தல் அவசியம்.கொடுக்கக் கூடாத மருந்துகள், நோய் அறிதல், பிறவிக் கோளாறு, ரத்த சோகை, விபத்துக்களும் சிதைவுகளும், ஒவ்வாமை, கல்லீரல் கடினமாதல், புற்று நோய், ஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், நீரிழிவு - மாரடைப்பு நரம்புக் கோளாறு, முதுமை நோய்கள், குழந்தை நலன் என 16 தலைப்புகளில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது.ஒவ்வாமை (பக். 58-66), மலச்சிக்கல் (பக்.94-100), நீரிழிவு (பக்.101-110), முத்திரை பெறும் கட்டுரைகள், "உடலினை உறுதி செய், நோய் பட வாழேல்' என்ற எண்ணம் உள்ளவருக்கும் நோயில் பாதிக்கப்பட்டவருக்கும் இந்நூல் ஒரு வழிதுணை.