சுப்ரமணிய பாரதியார் தமிழியற்புலம், புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி-605 014. (பக்கம்: 263.)
சங்க இலக்கியமும் அறக்கோட்பாடும் (கோ.வி.இராசகோபால்) சங்க இலக்கியமும் அழகியல் கோட்பாடும் (சு.இராசாராம்), போரியல் கோட்பாடு பற்றி வ.குருநாதன், மரபியல் கோட்பாடு பற்றி தி.செல்வம், தொன்மக் கோட்பாடு குறித்து ச.சிவகாமி, தொகுப்பியல் நெறிகள் பற்றி அ.பாண்டுரங்கன், யாப்புக் கோட்பாடு குறித்து அ.பிச்சை, பெண்ணியக் கோட்பாடு பற்றி அரங்க.மல்லிகா, பாலைதிணைக் கோட்பாடு குறித்து பெ.மாதையன், கற்புக் கோட்பாடு பற்றி சொ.முத்தையா, கலைக் கோட்பாடு பற்றி அ.இராமசாமி, தத்துவக் கோட்பாடு பற்றி து.லலிதா ஆகியோர் எழுதிய 12 கட்டுரைகள் இதில் அடக்கம். இப்பொருட்கள் குறித்து ஏற்கனவே ஏராளமான ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன என்ற போதிலும் புதுவைப் பல்கலைக்கழகம் தன் பங்கிற்குத் தமிழ்ப் பணி செய்துள்ளது வரவேற்கத்தக்கது.