இந்தியன் அகாடமி ஆப் ஹ்யூமன் ரீபுரோடக்ஷன்.
இது ஆங்கில நூல். இன்றைய மக்கள் சந்திக்கும் மூன்று முக்கியப் பிரச்னைகளான மன அழுத்தம், ஊட்டச்சத்துக் குறைபாடு, மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றைத் தொடர்பு படுத்தி , அதைக் களைவதற்கான எளிய வழிமுறைகள் கூறப்பட்டுள்ளன. வழிமுறைகள் எளிமையானவை.
முக்கியமாக சோயா உணவு மற்றும் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களை எளிதாக எடுத்துரைத்த ஆசிரியர் பாராட்டுக்குரியவர். இவற்றில் உள்ள நல்ல கொலஸ்டிரால் பற்றி விளக்குகிறார். நோயின்றி வாழ அவசியமான "ஒமேகா -3 பேட்டி ஆசிட்'என்னும் மூலக்கூறு துளசி இலை மற்றும் காலிபிளவரில் அதிக அளவில் இருக்கிறது என்ற ஆச்சரியம் தரும் செய்தி. மேலும், அத்தியாவசிய கொழுப்புச் சக்தி உணவை சரிவிகிதத்தில் எடுத்துக் கொண்டால் தோல் வறட்சி மற்றும் புற்று நோய் ஆகியவற்றைத் தவிர்க்கலாம் .
இது தவிர தாவரங்களின் மருத்துவக் குணங்கள் , மாதவிடாய்க் கோளாறுகள் , கருவில் உள்ள குரோமோசோம் கோளாறுகளைக் கண்டறிவது எப்படி? குழந்தையின்மைக்கான காரணங்கள் போன்ற பல செய்திகள் படங்களுடன் நல்ல தாளின் சிறப்பான அச்சில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
முன்னுரையில் மணிப் பால் ஏ.ராமராவ் குறிப்பிட்டபடி வாசகர்கள் அதிக அளவு தெரிந்து கொள்வதுடன், இவ்விஷயங்களைப் பற்றி சிந்திக்க அதிக வாய்ப்பு தரும் நல்ல நூல்.