சுகைனா பதிப்பகம், 106 எப்/4ஏ திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை-627 002. (பக்கம்: 224)
வர்த்தகம் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தங்கள் ஆயுத பலத்தால் இந்தியாவை வளைத்த வெள்ளையர்கள் அந்த ஆயுத பலத்தாலேயே நாட்டைத் தொடர்ந்து ஆளத் தலைப்பட்டனர். அதே ஆயுதங்களின் துணையால் அவர்களை விரட்டிக் காட்ட முடிவு செய்து களமிறங்கிய சுதேசி ராணுவ வீரர்கள் சந்தித்த போர்க்களமே 1806ல் வேலூரில் சிப்பாய்கள் நடத்திய வீரப்புரட்சி. இந்த வீரப்புரட்சியின் போது தங்கள் வீட்டை மறந்து நாட்டை நினைத்துத் தங்கள் இன்னுயிரையே தியாகம் செய்து வீரசுவர்க்கம் புகுந்த வீரர்களில் ஏராளமான தமிழக முஸ்லிம்களும் உண்டு. துரதிருஷ்டமாக அவர்களது தூய்மையான வீரமும் தியாகமும் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், வரலாற்று ஆய்வாளரான இந்நூல் ஆசிரியர் அந்த மறைந்து போன, மறக்கடிக்கப்பட்ட வரலாற்று உண்மைகளை ஆய்ந்து கண்டு சான்றாதாரங்களோடு வேலூர் புரட்சியில் பங்கேற்ற வீரர்களைப் பற்றியும் குறிப்பாக முஸ்லிம் வீரர்கள் பற்றியும் விளக்கமாக எழுதியிருக்கிறார் இந்த நூலில். வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது