நிவேதிதா பதிப்பகம், எண்.1, 3வது மாடி, புதூர் 13வது தெரு, அசோக் நகர், சென்னை-600 083. (பக்கம்: 112. (டெம்மி)
நம் உடலில் ஓடும் ரத்தம் 120 நாட்களுக்கு ஒருமுறை இயற்கையாகவே மாற்றியமைக்கப்படுகிறது. வயதாக ஆக 250 நாட்களுக்கு ஒருமுறையாக இந்த மாற்றத்தின் கால அளவு நீட்டிக்கப்படுகிறது.
நம் இதயத்தின் அணுக்களில் எங்கோ அல்லது நரம்புகளின் ஊடுருவலில் எங்கோ ஜனிக்கும் நுட்பமான உணர்ச்சி அலைகளே நம்மை இயக்குகின்றன.இத்தகைய அறிவியல் கருத்துக்கள், இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
டாக்டரின் கருத்துக்களை சுவைபட எளிய தமிழில் உருவாக்கிய ராஜகுமாரன், ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள்.
டாக்டர் சி.வி.கிருஷ்ணன், மருத்துவத் துறையில் புதிய ஆராய்ச்சிக் கருத்துக்களை வழங்கி சுரப்பிகளின் ரசங்களை வெளி உலகத்திற்கு அறிமுகம் செய்துள்ளார்.
கவிப்பேரரசு வைரமுத்து "நாளமில்லா சுரப்பிகளைப் பற்றிய இந்நூல் காலமெல்லாம் வாழ வாழ்த்துகிறேன்' என்று பாராட்டியதில் இருந்தே இந்நூலின் சிறப்பு விளங்குகிறது.