காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 125).
வாழ்வில் இதுவரை கண்டவை பொய் என்றும், போலித்தனங்கள் என்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம். மயானத்தில், சுடலையில் சாம்பலைப் பூசிக் கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம். ஆதாரமற்ற பாழ்வெளியில் நிற்கிறோம் என்று தத்துவம் கூறும் ஞானி, `புலன்களுக்கு எட்டாத உண்மைகள் நம் வாழ்வில் குறுக்கிடும்போது அயலாரைச் சந்திப்பதைப் போல, புதிய பிரதேசங்களைக் காண்பதைப் போல இவற்றை நாம் எட்டிப் பார்க்கத் தான் வேண்டும். இவை இல்லை என்று மறுத்துப் பேசுவதில் பயனில்லை' என்றும் தனது அனுபவங்களை நாத்திக - ஆத்திக வாதங்களாக இந்நூலில் விவரித்துள்ளார்.