விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 144).
சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் முக்தியடைந்தது 1929ம் ஆண்டு. இன்று போல் தகவல்களைப் பதிவு செய்யவோ, சேகரிக்கவோ போதிய வசதிகள் அன்று கிடையாது. நிலைமை இவ்வாறு உள்ள நிலையில், இந்த நூலாசிரியர் ,சேஷாத்ரி சுவாமிகளின் வாழ்க்கையை மிகக் கூர்மையாக ஆராய்ந்து, மிகச் சிறப்பாக நிகழ்வுகளைக் கோர்வைப்படுத்தி, எளிய, அழகிய தமிழில் எழுதியிருக்கிறார். எத்துணை பாராட்டினாலும் தகும் அரிய முயற்சி. குறிப்பாக, சத்குருவின் சில சித்து வேலைகளைப் பற்றி சர்வ ஜாக்கிரதையாக நம் பார்வைக்கு வைத்திருக்கிறார். `சத்குரு'வின் `தங்கக்கை' என்பது இன்றும் அருணையில் பேசப்படும் விஷயம். சித்திரங்களுடன் வழவழப்பான காகிதத்தில் அழகாக அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றனர்.