ஸ்ரீமத் மகாதேவ ஆசிரமம், வேதாந்த மடம், யாழ்ப்பாணம். (பக்கம்: 112. விலை: குறிப்பிடப்படவில்லை).
இலங்கை யாழ்ப்பாணத்தில் 18ம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கப்பட்டது ஸ்ரீசிவ குருநாத குருபீடம் மகாதேவ ஆசிரமம். இலங்கையில் சைவத்தையும் - சிவநெறிக் கொள்கைகளையும் இத்திருமடம் வளர்த்த விதத்தை பண்டிதமணி சி.கணபதியா பிள்ளை, கோ.சிவபாத சுந்தரம் போன்றோரது கட்டுரைகளால் தெரிந்து கொள்ள முடிகிறது. தமிழையும், சைவத்தையும் தங்களது இரு கண்களாய் போற்றி வளர்த்து வருகின்ற ஈழத்து மக்களது நல்லுணர்வை இந்நூல் புலப்படுத்துகிறது.