இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட், 138, பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை-12. (பக்கம்: 72).
இஸ்லாமில் திளைத்த உயிர்த்துடிப்பு `எல்லையில்லா அருளாளா...!' என நெகிழ்ந்திருக்கிறது. `எதுவரினும் தாங்குகிற பொறையுற்ற மனம்,' `நிதியாக
எப்போதும் நெஞ்சுக்குள் நேர்மை' பூண்டு கொள்ளுவன கொண்டு தள்ளுவன தள்ளி வாழ்ந்து காட்டிய வள்ளல் நபிகள் பெருமானாரைப் பற்றிய
பாடல்கள் வணங்க வைப்பன.அவர் உண்ணும் முறை, உருவ வழிபாட்டை உருவாக்க இடமளிக்காதது, மண வாழ்க்கை, மகளை நேசித்தது, ஈதலறம்
பேணியது, இஸ்லாம் செல்வமாக ஜிப்ரீல் மூலம் ஐம்பெரும் வசனம் பெற்று அனுபவத்தில் திளைத்தது, அடிமைகளை ஆதரித்தது, அவர் தம் சுதந்திரம்
பேணியது என்பன போன்ற நபிகளின் வாழ்க்கை நிகழ்வுகள் ஆசிரியரின் கம்பீரமான தமிழில் அருள்மொழிகள் ஆகின்றன.`கலிமா தொழுகை
நோன்போடுகவின்மிகு ஜகாத் ஹஜ் என்றுவிளங்கும் இவைகள் இஸ்லாத்தில்மேம்படு கடமைகள் எனப்படுமாம்' (பக்.31).எளிமை தவழும் ஏற்றம்
இது.ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிடப்பட்டுள்ள படங்கள் பாடங்கள் ஆகின்றன. நேர்த்தியும், அழகும் மென்மையுமான கட்டமைப்புடன் நூலின்
தரத்துக்குத் தரம் சேர்ப்பன அவை. அவ்வையாராக ஆசிரியரைக் சித்தரிக்கும் அணிந் துரை நூலை முடிக்கும்போது நினைவில் பொருந்துகிறது