கணேஷ் பப்ளிகேஷன்ஸ், 93, கிருஷ்ணா காலனி, கோயமுத்தூர்
641005. போன் : 2319790.
சமயங்களிடையே நல்லுறவைவளர்க்க எழுதப்பட்ட நூல். தமிழக அரசின் நிதியுதவியுடன் வெளியிடப்பட்ட தமிழ் வளர்ச்சிக்கான நூல். காந்தியடிகளின்
நெறியிலே தோய்ந்த ஆசிரியர் என்பதால் தர்மம் என்ற வார்த்தையை தலைப்பில் சேர்த்திருக்கிறார். இதை இந்து மதத்தினர் காலம் காலமாக கூறிவந்த
வார்த்தை என்றாலும், மத மோதல்களுக்கான சிக்கல்களை குறைக்க ஆசிரியர் வழிகாட்டுகிறார்.
மறுபிறப்பை மறுக்கும் கிறித்துவம், ஜுடாயிசம், இஸ்லாம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுப் பேசும் ஆசிரியர் `முன்விளைவுகளால் முடுக்கி விடப்பட்டதே
மனிதவாழ்வு ' என்று நிறுவுவது அர்த்தமுள்ளது. சாதாரண உலோகம் தங்கம் ஆவது போல அடியவன் இறைத்தன்ைமையை அடைகிறான் என்ற `சூபி'
தத்துவத்தை விளக்கும் பகுதி என்று பலவிஷயங்களை தான் எடுத்துக் கொண்ட கருத்துக்கு ஏற்ப கோர்த்திருப்பது அழகு.
மொத்தத்தில் எல்லாச் சமயங்களும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கின்றன என்பதை நன்கு விளக்கியது ஆசிரியரின் வெற்றியாகும். மதமோதல்கள்,
முரண்கள் அதிகரித்த நிலையில் நியாயமான சிந்தனைகளை அலசும் நூல்.