பூரம் பதிப்பகம், பு.எண்.2, ப.எண்.59, ராஜூ நாயக்கன் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 106). இந்திரா காந்தி மலரும் நினைவுகளாக பல சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகள். மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்வராஜ் பவனின் கதை, குழந்தைப் பருவம், தன் பதினாறாவது வயது, சாந்தி நிகேதனில் வாழ்க்கை, சிறை நினைவுகள், தாயாக இருப்பது பற்றி, பாபுவைப் பற்றிய நினைவுகள், ஜவகர்லால் நேரு என்ற தலைப்புகளில் தன் வரலாறு சுவைபட கூறப்பட்டுள்ளது. சில விளக்கங்களுக்கு விடைகள் மனதை தொடுகிறது. அனைவரும் படித்து மகிழத்தக்க சிறந்த நூல். இந்திரா காந்தியை நேரில் சந்தித்து பேசிய உணர்வை இந்நூலைப் படிப்பவர்கள் உணர முடிகிறது.