வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 176).
ஐம்பதுகளில் அமரர் கல்கி, இலங்கைப் பயணம் மேற்கொண்டார். அந்த பயண அனுபவங்களை, "கல்கி' வார இதழில் கட்டுரைகளாக எழுதியிருந்தார். இதை, இப்பொழுது புத்தகமாக வானதி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இலங் கை வாழ் தமிழர்களின் உரிமைக்கான போராட்டம், அப்பொழுதே துவங்கி விட்டதை, இந்த கட்டுரைகளைப் படிக்கும்போது உணர முடிகிறது. அந்த மிகச்சிறிய தீவின் வளமைக்கும், செழிப் புக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் சிந்திய வியர்வையை மிகச் சிறப்பாக அமரர் கல்கி பதிவு செய்திருக்கிறார். சிங்கள இன வெறியர்களின் அடக்கு முறையை, அகிம்சை உணர்வுடனும், அமைதியுடனும் சகித்துக் கொண்ட அந்த நாளைய இலங்கைத் தமிழர்களின் நிலை பற்றி, தமக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் நம் கண் முன் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அமரர் கல்கி.