கோவி பதிப்பகம், வினோத் அபார்ட்மென்ட், சமயபுர இல்லம், பிளாட் -1, 2, கவரைத் தெரு, ஆற்காடு சாலை, வடபழனி, சென்னை-26. (ஒவ்வொரு பாகமும் பக்கம்: 400.)
எழுத்தையே தவமாக, உயிர் மூச்சாக கொண்டு செயல்பட்டு வருபவர் கோவி. இந்த நாவலையும் ஒரு வேள்வியாகச் செய்துள்ளார் என்றால் மிகையல்ல.
இந்த நாவலில் மூன்று பாத்திரங்கள் மூன்று ஹோமச்சுலாகளாகக் காட்சி தருகின்றனர். டாக்டர் மதுசூதனன், பார்த்திபன், கண்ணன். நாவலைப் படிக்கும் முன் தயவு செய்து 18 அத்தியாயக் கீதையை படித்துவிடுங்கள் அல்லது நாவலை மட்டும் படித்து விட்டு பிறகு கீதையைப் படியுங்கள். ஓட்டம் தடைபடாமலிருக்க வழியாகும். ஆக ஒரே கல்லில் இரு மாங்காய்கள். நாவலை படித்து மகிழலாம். அதேசமயம் கீதை நூலின் 18 அத்தியாயங்களையும் உரைநடையில் படித்துவிட முடியும்.
நாவலைப் படித்து மகிழலாம். பரவசமடையலாம். இது ஒரு அற்புதமான நாவல் வேள்வி.