ஆசிரியர்: சேஷாத்திரி சாஸ்திரிகள், வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை - 600 002. (பக்கம்: 191, விலை: .)
ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விதான் ஆன்மிகத் திறவுகோல் என்று சொன்னான் கிரேக்கத்து ஞானி.
வேதம், புராணம், தர்ம சாஸ்திரம், மன நலம், உடல் நலம், அன்றாட நடைமுறை, வழிபாட்டு முறைகள், ஆகம விதிகள், ஐதீகம், சடங்கு, சம்பிரதாயம், கலாசாரம் என பல தலைப்புகளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பொறுத்தமான, புனைந்துரை கலக்காது, சரித்திர புராண இதிகாச வேத இலக்கிய நிகழ்வுகளோடு படங்களையும் இணைத்து ஒப்பிட்டு விடை தந்துள்ள தொகுப்பு நூல் இந்நூல்.
சிறந்த நூல். ஆன்மிக தேடலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட பெருமக்களுக்கு இந்நூல் நல்ல வழிகாட்டி.