புதுப்புனல், பாத்திமா காம்ப்ளக்ஸ், 117, முதல் மாடி, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-600 005. (பக்கம்: 208.)
""எழுபதுகளில் மார்க்சியம் எனக்கு அறிமுகமான போதே அதில் வலது இடது என்று இரண்டு கட்சிகள் பிளவுண்டு இருந்தன. மேலும் இவ்விரண்டையும் மறுதலிக்கும் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் குழுக்களும் இயங்கிக் கொண்டிருந்தன.
இவையெல்லாம் கட்சி சார்ந்த மார்க்சியத்தின்பால் ஈடுபடுவதில் எனக்குக் குழப்பத்தையும், கட்சிகளை விட்டு எட்டி நிற்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்தின. கம்யூனிஸ்ட் கட்சி பரிந்துரைக்கும் பாணியிலான எழுத்துக்களை எழுதுவதில் எனக்கு மனத்தடை இருந்தது'' (பக்.196) என்று கூறும் எம்.ஜி.சுரேஷ், "சிலந்தி,' "யுரேகா என்றொரு நகரம்,' "அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்' போன்ற பல நாவல்களை எழுதியவர்.
இன்றளவும் "போர்ஹே' லத்தீன், அமெரிக்க எழுத்தாளரே என் ரோல் மாடல் என்று கூறும் இவர் "என்னுடைய ஒட்டுமொத்த எழுத்துக்கள் யாவுமே சொற்கள் தான். சொற்களைத் தவிர வேறில்லை'' என்று சுயவிமர்சனம் தந்துள்ளார். பின் நவீனத்துவ உரையாடல்களைக் கொண்ட இந்நூல் எம்.ஜி.சுரேசின் எழுத்துக்களைப் பற்றிய சுயவிமர்சனம் கொண்ட சுவையான தொகுப்பு.