கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை -16. (பக்கம்: 208,)
இது அறிவியல் யுகம். அறிவியல் வளர்ச்சி மிக வேகமாக பரவி வருகிறது. அதற்கேற்ப நாமும் ஈடுகொடுத்து முன்னேற வேண்டுமல்லவா? அதற்கு ஒவ்வொருவரும் அடிப்படை அறிவியல் அறிவை முதலில் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும் 50 தலைப்புகளில் அறிவியல் தகவல்கள் தொகுக்கப் பட்டுள்ளன. உதாரணமாக, புவி சுழலும் வேகம் குறைகிறதா? நமக்கு பசி எவ்வாறு ஏற்படுகிறது? குளோரின் என்ன செய்யும்? கடலில் உப்பு போட்டது யார்? போன்று பல அறிவியல் கேள்விகளுக்கு, விளக்கமாக பதிலளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பயன்படும் நூல் வரிசை இது.