ஆசிரியர்: டோ லென்னாக்ஸ், மொழிபெயர்ப்பு: லட்சுமி விஸ்வநாதன், வெளியீடு: சுரா பதிப்பகம், 1620, ஜே பிளாக், பதினாறாவது பிரதான சாலை, அண்ணாநகர், சென்னை - 40. (பக்கம்: 304.)
குதிரை சக்தி என்னும் அளவை ஜேம்ஸ் வாட் என்பவர் முதன் முதலில் தமது நீராவி இயந்திரத்துக்குப் பயன்படுத்தினார். பழங்காலத்தில், நிலக்கரியைச் சுரங்கத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்குக் குதிரைகள் பயன் படுத்தப்பட்டன. அந்தக் குதிரைகளின் ஆற்றலிலிருந்து கணக்கிடப்பட்டதால், குதிரை சக்தி என்கிறோம் என்று இந்த நூல் தெரிவிக்கிறது.
மேலும், துக்கத்தை வெளிப்படுத்த எப்போது முதல் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடும் பழக்கம் தொடங்கியது? கங்காருவுக்கு அப்பெயர் எப்படி வந்தது? க்ளூ என்றால் என்ன? முதலான பல வினாக்களுக்கு விடை தரும் வகையில் இந்த நூல் தொகுக்கப் பட்டுள்ளது. நாற்பத்தொரு தலைப்புகளில் 353 தகவல்களைத் தரும் இந்த நூலினை, ஒரு தகவல் களஞ்சியம் எனலாம்.