முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை - 600 040. (பக்கம்: 144.)
கடந்த 1920 முதல் 1947 வரை, இந்திய விடுதலைப் போரில் நடைபெற்ற நிகழ்வுகளைக் கட்டுரைகளாக்கி உள்ளார் சுதந்திரப் போராட்டத் தியாகி ஏ.என்.சிவராமன். காந்தி சகாப்தம் தொடங்கியபின், இந்திய விடுதலைப் போராட்டத்தில் மக்கள் பங்கு மிகுதியானதை நூல் தெரிவிக்கிறது.
இந்தியாவின் இறுதி கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டன் 1947 மார்ச் 23ல் இந்தியாவிற்கு வந்தார். அவர் வந்த ஐந்து மாதத்திற்குள், இந்திய விடுதலைக்கான அனைத்து வேலைகளையும் விரைந்து முடித்த தன்மையை ஆசிரியர் விளக்கியுள்ளார்.
கடந்த 1942ம் ஆண்டில், வெள்ளையனே வெளியேறு என்று காந்தியடிகள் போராட்டம் நடத்திய வேளையில், வெள்ளையனே நாட்டைப் பிரித்துவிட்டு வெளியேறு என்று ஜின்னா போராட்டம் நடத்தியதையும் ஆசிரியர் எளிய நடையில் விளக்கியுள்ளார். படங்களுடன் வெளியாகியுள்ள இந்த நூல் இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர்க்கு ஓர் ஆரம்ப நூல்.
-முகிலை இராசபாண்டியன்.சீவக சிந்தாமணி
ஆசிரியர்: தி.நா.அங்கமுத்து முதலியார், வெளியீடு: வனிதா பதிப்பகம், தியாகராயநகர், சென்னை - 17. (பக்கம்: 160, விலை: ரூ.80.)
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணியை உரைநடையில் - எளிய தமிழில், பள்ளி மாணவர்களுக்காகவே நாவல் போன்று தந்துள்ளார் ஆசிரியர். நாமகள் இலம்பகம் எனத் துவங்கி, முக்தி இலம்பகம் என 13 அத்தியாயங்களில் தந்துள்ளது சிறப்பு. படங்களோடு கூடிய இந்நூல், மாணவர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது. நல்ல இலக்கிய நூல்.