காவ்யா, 16, இரண்டாவது குறுத்குத் தெரு, டிரஸ்ட் புரம், கோடம்பாக்கம், சென்னை - 24. (பக்கம்: 152,)
வடநாட்டில் ஜான்சி ராணி தோன்ற, ஒரு நூற்றாண்டு காலம் முன்பே தமிழகத்தில் தோன்றி, வெள்ளையருக்கு எதிராக வீரப்போர் புரிந்தவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறி மடியும் வழக்கமுள்ள ஒரு காலக் கட்டத்தில், தன் கணவர் சிவகங்கை அரசர் முத்துவடுகநாதரைக் கொன்ற வெள்ளையர்களைத் துணிவுடன் எதிர்த்து நின்று போரிட்டுப் பழிதீர்த்ததுடன், வெற்றியும் பெற்றுச் சுதந்திரதேவி போல் அரசாண்ட இந்தத் தமிழரசியின் வீர வரலாற்றை, என்றோ சிலர் திரித்தும் எழுதினர். அதை மறுத்து, உண்மையை ஆதாரங்களுடன் விவரித்து எழுதப்பட்ட நூல் இது.
பின்னிணைப்பாக, சுத்தானந்த பாரதியாரின் "வீரவேலு நாச்சியார்' நாடகத்தை முழுவதுமாக அளித்துள்ளனர்.