பாரதிதாசன் அறக்கட்டளை, 4, முதல் தெரு, காந்தி நகர், புதுச்சேரி-605 009. (பக்கம்: 144.)
அண்ணாதுரை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நூறு கவிஞர்களின் கவிதைத் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. அண்ணாதுரையைப் பற்றிய தங்கள் பார்வைகளை நூறு கவிஞர்களும் இதன் வாயிலாக வழங்கியுள்ளனர்.
அண்ணாதுரையின் சிந்தனைத் துளிகளைத் தேர்ந்தெடுத்து நூலின் இறுதியில் கொடுத்திருப்பது சிறப்பு. நியூயார்க் மருத்துவ மனையிலிருந்து அண்ணாதுரை 1968ம் ஆண்டு பெரியாருக்கு எழுதிய கடிதத்தை அப்படியே வெளியிட்டிருப்பது நூலுக்கு மேலும் சிறப்பை சேர்த்துள்ளது.