ஸ்ரீ புவனேஸ்வரி பதிப்பகம், 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி., நகர், சென்னை - 600 035. (பக்கம்: 344.)
கடந்த 1909ம் ஆண்டு வெளிவந்த நூலின் மறுபதிப்பு, நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் உரைநடை எவ்வாறு இருந்தது என்பதை, இந்த நூலைப் படிப்போர் அறிந்து கொள்ளமுடியும். தற்போது, பொருளடக்கம் என்று குறிப்பிடப்படும் பக்கம் அந்தக் காலத்தில், விஷய சூசிகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் இருந்த மூலநூலைச் சுதேசமித்திரனில் துணையாசிரியராகப் பணியாற்றிய தி.சி.வில்வபதி செட்டியார், தமிழில் மொழிபெயர்த்து முதன் முதலில் வெளியிட்டுள்ளார்.
நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ் மொழிபெயர்ப்பு எவ்வாறு இருந்துள்ளது என்பதற்கும் இந்நூல் எடுத்துக்காட்டாக அமைகிறது.
தமிழ் நூல்களை எழுதியும், பதிப்பித்தும் தமிழ்த் தொண்டு ஆற்றி வரும் நல்லி குப்புசாமி செட்டியார், ஆவணக் காப்பகத்திலிருந்து இந்த நூலினைப் பெற்றுப் பதிப்பித்துள்ளார்.
அவர் எழுதிய பதிப்புரையில் இந்திய சரித்திரச் செய்திகளை முறையாக இளைஞர் சமுதாயம் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த நூல் மறுபதிப்பு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பழைய பதிப்பின் முதல் பக்கத்தினை அப்படியே வெளியிட்டுள்ளதால், அக்கால அச்செழுத்தினைக் காணும் வாய்ப்பையும் இக்காலத்தினர் பெற முடியும்.