தங்கத்தாமரை பதிப்பகம், 37, கால்வாய்க்கரை சாலை, கஸ்தூரிபா நகர், அடையாறு, சென்னை-20. (பக்கம்: 224.)
"தமிழ்ச்சுடர்' தினசரியில் தொடராக வெளிவந்து பலரும் படித்துப் பயன் பெற்ற கட்டுரைகள் நூலுருவம் பெற்றுள்ளது. பொழுதுபோக்குக் கதைகளை விட சமூகப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகள் நிச்சயம் பயனுள்ளவை என்பதில் சந்தேகமில்லை.
பெண்ணால் முடியும் என்றால் ஆணால் முடியாதா என்று கேட்கக்கூடாது. ஆண்களுக்கு வாய்ப்புகளும், எங்கேயும் போய்வரக்கூடிய சுதந்திரமும் அதிகம்.
இது பொழுதுபோக்குக்காகப் படிப்பதற்கு மட்டும் அல்ல, படித்து வாழ்க்கையில் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் பீடு நடைபோட ஒரு கையேடு.