சூர்யா இலக்கியம், 4ம் குறுக்கு தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24 (பக்கம்:147)
ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லாந்து மாநிலம் தான் இந்த நாவலின் கதைக் களம். வித்தியாசமான கதைக்களம், வித்தியாசமான நடை என நாவல் உலகில் புதிய பாதையை உருவாக்க முயற்சித்துள்ளார்
கபிலன் வைரமுத்து. நாவலின் பல இடங்களில் நூலாசிரியரின் அறிவியல் பார்வை பளிச்சிடுகிறது. நவீன உலகின் தொழில்நுட்ப ஏற்றத் தாழ்வுகளால் ஏற்பட்டுள்ள விளைவுகள் நூலில் விளக்கப்பட்டுள்ளன.
நாவலில் ஆங்காங்கே காதலும் பசுமை நிறைந்த நினைவுகளாக விவரிக்கப் பட்டுள்ளன. காதலும், காதலின் வலிகளும் சுகமான வரிகளில் மனதை தாலாட்டுகின்றன. இது சர்வதேச போர்க்களத்தில் ஓர் தமிழனின் வெள்ளைக்கொடி.