நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160. விலை: ).
ஆசிரியர் Basic மொழி கற்றுக் கொள்ளுங்கள் முதல் "இ' கம்ப்யூட்டர் மொழி' நூல் வரை கம்ப்யூட்டர் அறிவியலில் 28 புத்தகங்கள் எழுதியுள்ளார். கம்ப்யூட்டர் புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே வருவதால், தாய்மொழியில் இருப்பது எளிதில் பயன்படுத்துவதற்கும், புரிந்து கொள்வதற்கும் உதவுகிறது. அதிலும் Dbase பயன்பாடு எவ்வாறு பயன்படுத்துவது? ஆகியவற்றை ஆசிரியர் எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் உதாரணங்களுடன் 17 தலைப்புகளில் விளக்கியுள்ளார். இத்துடன் Dbase சொற்களஞ்சியம் பிற்சேர்க்கையாக உள்ளது. தமிழில் கம்ப்யூட்டர் கற்க விரும்புவோருக்கு உபயோகமான நூல் இது.