ஸ்ரீவாரு பதிப்பகம், 919, பெரியார் ஈ.வெ.ரா., சாலை, சென்னை-84. (பக்கம்: 160.)
அகு என்றால் எடுத்தல், வெளியேற்றுதல் என்று தமிழில் பொருள் கொள்ளலாம். பிரஷர் என்றால் அழுத்தம் கொடுத்தல். உடம்பில் நரம்பு சந்திப்புகள் நரம்பு மையங்கள் சந்திக்கும் புள்ளிகளில் (பாயின்ட்ஸ்) தேவையான அளவில் அழுத்தம் கொடுத்து நோயை வெளியேற்றும் முறைக்கு அகு பிரஷர் தெரபி என்று பெயர். அது சீனா, ஜப்பான் ஆகிய தேசங்களின் கண்டுபிடிப்பு என்றிருக்கும் ஒரு பரவலான நம்பிக்கையை உடைத்தெறிந்து இந்தச் சிகிச்சை முறையின் தோற்றம் இந்தியாவில் தான் என்று நிபுணர் ஆசிரியர் பல விளக்கப் படங்களுடன் இந்நூலில் வெளியிட்டுள்ளார்.