நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப் பேட்டை, சென்னை-14. (பக்கம்: 80.)
""இறைவன் நம் பக்கம் என்றால், எதிர்ப்பக்கம் யாரும் இருக்க முடியாது,'' என்று தொடங்கி, இளைய பாரதத்தை தனது வினாவாலும், விடையாலும், கருத் தாலும் எழுச்சி பெற செய்யும் அப்துல் கலாமின் சிந்தனை முத்துக்கள், இந்த நூலில் வெள்ளிக் கம்பியில் மாலையாகக் கோர்த்துத் தரப்பட்டுள்ளது.
""பூமியின் முதல் விஞ்ஞானி யார்?'' குழந்தை தான்.
""வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ணலாம்; பூமியில் உள்ள மணலைக் கூட எண்ணி விடலாம். ஆனால், இந்தியாவில் உள்ள ஜாதிகளை எண்ணவே முடியாது.'' இப்படிப் பல கருத்துக்களை இந்நூலில் வாசிக்கலாம்; நேசிக்கலாம்.