யுனிவர்சல் பப்ளிஷர்ஸ், 2, முதல் மாடி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 344.)
திருக்குர் ஆனின் அழைப்பு நேரடியானது. மனிதன் இறைவனுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் முறையில் மனிதனுடைய சிந்தனை, அன்றாட வாழ்க்கை, அனுபவங்கள் ஆகியவற்றை அவன் பயன்படுத்தும் அளவில் அந்த அழைப்பு அமைந்துள்ளது.
மவுலானா அபுல்கலாம் ஆசாத் இக்குழப்ப நிலையை நீக்கி தெளிவுபடுத்த விரும்பினார். அதன் விளைவே அவர் உருது மொழியில் எழுதிய "தர்ஜுமானுல் குர்ஆன்' எனும் அழகிய இனிய தெளிவான விரிவுரை மொழி பெயர்ப்பு நூலாகும்.
மனித குலத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் அரிய நூல்களில் மவுலானாவின் இந்நூலும் ஒன்று. இவ்விரிவுரை முஸ்லிம்களின் அறிவுத் துறையில் புதிய விழிப்புணர்ச்சியை உண்டாக்குகிறது.