பழநியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-600 014. (பக்கம்: 224.)
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று கோவை இலக்கியம். இந்தக் கோவை இலக்கியத்தில் பல துறைகள் காணப்படும். இந்தக் கோவையில் ஒரு துறை மட்டும் இடம் பெற்றதால் இது ஒரு துறைக் கோவை எனப்பட்டது. நாணிக் கண் புதைத்தல் என்னும் துறையில் அமைந்த கோவை என்பதனைத் தெரிவிக்க அதுவே நூலின் தலைப்பாகவும் அமைந்துள்ளது.
நாணிக் கண் புதைத்தல் என்னும் இந்தக் கோவையினை இயற்றியவர் அமிர்த கவிராயர். பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர் தளவாய் சேதுபதியின் அவைக்களப் புலவராய் விளங்கியிருக்கிறார்.
காஞ்சிபுரம் ராமசாமி நாயுடுவின் உரையுடன் பதிப்பிக்கப்பட்டுள்ளதால், எல்லோரும் பொருள் புரிந்து படிக்க முடியும்.