வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 320.)
அனைவருக்கும் தெரியாத கோவில்களைத் தேடி அலைந்து, மிகப் பெரும் முயற்சிக்குப் பிறகு அதைக் கண்டறிந்த ஆனந்த அனுபவத்தை இந்த நூல் சொல்கிறது.
புனித நர்மதை நதிக் கரையில் ஆதிசங்கரர் தீட்சை பெற்ற ஓம்காரேஷ்வர் குகையைத் தேடிக் கண்டறிந்து அதைப் புதுப்பித்து, யாவரும் தரிசிக்கும் வகையில் செய்த நூலாசிரியர் தேடல் முயற்சிக்கு தெய்வம் அருள் செய்துள்ளது.
காமக் கலையின் பல்கலைக்கழகமாய்த் திகழும் "கஜுராஹோ' ஆலயத்தின் அருமையான கதை, தேனைப் போல் இனிக்கிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள உதயபூர், உதயேசுவரன் கோவில், வியப்பூட்டும் வேதிஷகிரி குகைக் கோவில்கள், தேவி சாரதா அம்மன் கோவில் ஆகிய ஆலயங்களைப் படிப்பவர் நேரில் சென்று பார்க்க விரும்புவர். காணாத கோவில்களைக் காட்டும் கற்கண்டு நூல்!