கவிஞர் சொல்கேளான் ஏ.வி.கிரி, தான் கேட்டதையும், பார்த்ததையும், படித்து உணர்ந்த அனுபவங்களையும் கவிதைகளாக எழுதியுள்ளார். குறிப்பாக, சமூக நலனை எதிரொலிக்கும் கவிதைகள் இதில் இடம் பெற்றுள்ளன. அட்சய திருதி என்ற கவிதை சிந்தனையை தூண்டும் வகையில் உள்ளது. நாத்திக கொள்கையில், நம்பிக்கை உடையவர் என்பதால் ஆத்திகர்களை பற்றிய கவிஞரின் விமர்சனங்கள் கவிதைகளாக உருவம் பெற்றுள்ளன.