வனிதா பதிப்பகம், 11, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 144.)
தெய்வத் தமிழ் புலவர் களான அவ்வையார், காளமேகப் புலவர் ஆகி யோரின் தேர்வு செய்யப் பட்ட சில பாடல்களில் தந்த ஆழ்ந்த கருத்துக்களை விளக்கியுள்ளார் ஆசிரியர். விநாயகர், முருகன், சிவன், அம்பிகை ஆகியோரை வழிபடும் முறைகளையும், சிவத்தலங்கள், கல்வி, செல்வம், பக்தி, துறவு, அறம், பொருள், இன்பம், வறுமை, கணவன் - மனைவியின் கடமைகள் என மொத்தம் 99 தலைப்புகளில் சிறந்த முறையில் விளக்கி கூறியுள்ளார்.
பண்டைய காலத்தில் வள்ளலைத் தான் தாதா என்று சொல்வர். ஆனால், தற்போது அப்பெயர் யாருக்கு வழங்கப்படுகிறது என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது என்கிறார் நூலாசிரியர்.
தமிழ்ப் பாடல்களின் தத்துவம் மூலம் நன்னெறி கூறப்பட்டு உள்ளது.