சந்தியா பதிப்பகம், சென்னை-600 083. (பக்கம்:80.)
2007ம் ஆண்டு, தனது 88வது வயதில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானியப் பெண்மணி, ஆங்கில எழுத் தாளரான டோரிஸ் வெஸ்சிங் பற்றிய சுருக்கமான நூலிது. உலகப் போரைப் பற்றிய தந்தையின் அனுபவங்கள் டோரிஸ் மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. படிப்பின் மீது கவனம் இல்லை. படிப்பை நிறுத்தினார். இலக்கிய ஆர்வம் ஏற்படவே சிறு வயதில், கவிதைகள் எழுதி இன்று உலகில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் பெரும்பாலான இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
"தி கிராஸ் இஸ் சிங்கிங்', "த கோல்டன் நோட்புக்', "த குட் டெரரிஸ்ட்', "அண்டர் மை ஸ்கின்', "வாக்கிங் இன் த ஷேட்' போன்றவை பிரபலமான படைப்புகளாகும்.
மற்றவர்களில் இருந்து விலகி நின்று, தனிமனிதர்களை உற்றுநோக்கி எழுதும் இவர் என்றும் தனிமை விரும்பி. இங்கிலாந்தின் தலைநகரை யொட்டிய பகுதியில் வாழும் இவருக்கு வயது 90. எனினும் எழுத்துக்கள் துடிப்பானவை.